Pages

Subscribe:

Tuesday, September 3, 2013

Free Seminar For G.C.E (O/L) Students 0n 26.08.2013 - 30.08.2013

க.பொ.த சா/த மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் முதலாம் நாள் நிகழ்வுகளில் அமைப்பின் தலைவர் அ.வாகீஷன் தலைமையில் கடந்த வருடம் பரீட்சையில் 9A சித்தி பெற்ற  லோ.கினோஸா, வி.சதுட்சா, தி.சிந்துவர்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதிதிகளாக அதிபர்களான திரு.வித்தியராஜன் , திரு.மணிமாறன் கலந்து சிறப்பித்தனர்.



























தொடர்ந்து தமிழ் பாட கருத்தரங்கு இடம்பெற்றது. இரண்டாம் நாள் கணிதபாடம் திரு. P. சுபாஸ்கரன் மற்றும் திரு. A .வாகீஷன் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினார்கள். முன்றாம் நாள் திரு.S. சுரனுதன் ஆங்கில பாடத்தையும் நான்காம் நாள் விஞ்ஞான பாடத்தை திரு.J.அன்ரனி பயஸ், செல்வி. T.உதயரஜி, திருமதி.சிவேந்தினி பார்த்தீபன் வழங்கினார்கள். இறுதி நாள் வரலாறு பாடத்தை திரு.S . விமல்ராஜ் நடாத்தினார். இறுதி நாள் நிகழ்வுகளின் போது மாணவர் கருத்துக்கள் மற்றும் நடைபெற்ற பாடங்களில் வைக்கப்பட்ட பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.S. ஜெகராஜன் , உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. T. சகாதேவராஜா , பொறியியலாளர் திரு.K. சசிகுமார் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

Tuesday, June 25, 2013

One Day Trip 23.06.2013

எமது அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் சுற்றுலாவின் போது களுதாவளை பிள்ளையார் ஆலயம் மயிலம்பாவெளி  காமாட்சி அம்மன் ஆலயம் வாகனேரி குளக்கட்டு பாசிக்குடா மற்றும் பாலமீன்மடு வெளிச்சவீடு என்பவற்றை பார்வையிடுவதை படங்களில் காணலாம்.























Friday, March 8, 2013

Vaaman Sir Memorial Day 2013

அமரர் ம.சிவபாலன் ஞாபகார்த்த 4ஆம் ஆண்டு நினைவஞ்சலியாக இவ்வருடம் இராமகிருஸ்ண மிஸன் காரைதீவு சாரதா மகளிர் இல்ல மாணவிகளுக்கு பாடசாலைச் சப்பாத்துகளை 2003 A/L SOCIAL ASSOCIATION மற்றும் STUDENTS OF VAAMAN SIR அமைப்புகள் இணைந்து வழங்கும் நிகழ்வு சர்வதேச மகளிர் தினமாகிய 08.03.2013 இல் இடம்பெற்றது. 


Sunday, January 27, 2013

Niththy with kosala Wedding on 27.01.2013




இன்று திருமணபந்தத்தில் இணையும் அருணாசலம் நித்திலேஸ்வரன், செல்வரெத்தினம் கோசலா  என்பவர்களை எமது அமைப்பு சார்பில் தம்பதியரை சீருஞ்சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்

Saturday, December 29, 2012

2003 A/L Association Get together 2012

அமைப்பின் ஒன்றுகூடல் காரைதீவு 06 இல் அமைந்துள்ள பல்தேவைக் கட்டடத்தில் (நந்தவன பிள்ளையார் கோவில் பின்புறம்) 29.12.2012 இல் அ.வாகீஷன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதிகளாக அதிபர்கள் திரு.S. மணிமாறன் திரு.R. ரகுபதி மற்றும் அமைப்பின் ஆலோசகர்களான திரு S.புவனேந்திரன்  திரு.S சுரனுதன் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வுகளின் போது
கல்முனை வலயத்தின் சிறந்த அதிபராக ஜனாதிபதியிடமிருந்து 'பிரதீபா பிரபா' விருதினைப் பெற்ற திரு. S.மணிமாறன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து அதிபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமைப்பின் புதிய நிர்வாகத்தெரிவும் மதியபோசன விருந்துகளும் இடம்பெற்றன.