Pages

Subscribe:

Saturday, December 29, 2012

2003 A/L Association Get together 2012

அமைப்பின் ஒன்றுகூடல் காரைதீவு 06 இல் அமைந்துள்ள பல்தேவைக் கட்டடத்தில் (நந்தவன பிள்ளையார் கோவில் பின்புறம்) 29.12.2012 இல் அ.வாகீஷன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதிகளாக அதிபர்கள் திரு.S. மணிமாறன் திரு.R. ரகுபதி மற்றும் அமைப்பின் ஆலோசகர்களான திரு S.புவனேந்திரன்  திரு.S சுரனுதன் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வுகளின் போது
கல்முனை வலயத்தின் சிறந்த அதிபராக ஜனாதிபதியிடமிருந்து 'பிரதீபா பிரபா' விருதினைப் பெற்ற திரு. S.மணிமாறன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து அதிபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமைப்பின் புதிய நிர்வாகத்தெரிவும் மதியபோசன விருந்துகளும் இடம்பெற்றன. 











Friday, November 23, 2012

Wedding On 23.11.2012 Veny with Suthan


இன்று திருமணபந்தத்தில் இணையும் நடனசபாபதி சுதர்சன், சிவநாதன் எழில்வேணி என்பவர்களை எமது அமைப்பு சார்பில் தம்பதியரை சீருஞ்சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்

Saturday, November 3, 2012

Wedding on 03.11.2012






இன்று திருமணபந்தத்தில் இணையும் தியாகராசா மோகனஇராஸ், நல்லதம்பி விஜிதா என்பவர்களை எமது அமைப்பு சார்பில் தம்பதியரை சீருஞ்சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்

Monday, August 27, 2012

Free Seminar For G.C.E O/L Students- 2012


2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பு காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடாத்தும் க.பொ.த சா/ த மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வுகளின் போது  அமைப்பின் தலைவர் திரு.A.வாகீஷன், வித்தியாலய  அதிபர் திரு.R. ரகுபதி ,பிரதிஅதிபர் திருமதி.T.சரவணமுத்து ,விபுலாநந்தா வித்தியாலய பிரதி அதிபர் திரு.M.சுந்தர்ராஜன் மற்றும் அமைப்பின் உபதலைவர் திரு.S. விமல்ராஜ் ,செயலாளர் திரு.K. மதியழகன் உரையாற்றினர்.  அதனைத் தொடர்ந்து முதல் நாள் பாடமான விஞ்ஞான பாட கருத்தரங்கினை திரு.J.அன்ரனி பயஸ் & செல்வி.S. உதயரஜி தொடர்ந்தனர். காரைதீவு ,வீரமுனை, கல்முனை,மல்வத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 165 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

Sunday, July 15, 2012

Wedding on 15.07.2012

 
இன்று எமது அமைப்பைச் சேர்ந்த இருவர் திருமணபந்தத்தில் இணைந்துள்ளனர். இரத்தினசிங்கம் நிதர்சன் அக்கரைப்பற்று கோளாவிலைச் சேர்ந்த கல்யாணி கணேசன் என்பவரையும்


மற்றும் சுஜிதா உருத்திரன் , கணேஸ்வரன் வினோதரன் என்பவரையும் மணமுடித்துள்ளனர்.

எமது அமைப்பு சார்பில் தம்பதியரை சீருஞ்சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம். 

Sunday, May 6, 2012

Blood Donation @ Karaitivu 06.05.2012



காரைதீவு 2003  உயர்தர பிரிவு சமுக அமைப்பு மனித நேய சுக நல விழிப்புணர்வு ஒன்றியத்துடன்  இணைந்து நடாத்திய இரத்த தான நிகழ்வு இன்று 06.05.2012 காலை 9.00 மணிக்கு  காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல இளைஞர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 6, 2012

நீங்கா நினைவுகளுடன் வளர்க சிவபாலன் ஆசிரியர் புகழ்.

எமது வாமன் சேர் ஞாபகார்த்த நிகழ்வினை (Vaaman Sir Memorial English day-2012) சிறப்பாக நடாத்துவதற்கு சகல வழிகளிலும் தமது பங்களிப்புகளை வழங்கி எம்மை ஊக்குவித்த பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

Tuesday, February 28, 2012

Vaaman Sir Memorial English Day 's Awarding & Commemoration Ceremony 2012


07.02.2012 அன்று நடைபெற்ற அமரர் மகாதேவன் சிவபாலன் (Vaaman Sir) ஞாபகார்த்த ஆங்கில தினப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் அன்னாரது நினைவுதின நிகழ்வுகளும் 26.02.2012 சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

Saturday, February 11, 2012

Final Results of Late Mr.M.Sivapalan Memorial English Day Competitions 2012

Final Results  of Late Mr.M.Sivapalan Memorial English Day Competitions 2012 are furnished below.
Our sincere thanks go to Senior English Teachers and Higher Officials of English Language who adjudicated voluntarily 
the match Mr.N.Prashanthan, Mr.JJ.Kignsly and Mr.S.Sivanatharajah from Kalmunai and Mr.N.Thiyagarajaha and MrKV Paranirupasingam  from Karaitivu. Students of Vaman Sir Who are now English Teachers supported as invigilators in these events.













Virakesary newspaper article


Tuesday, February 7, 2012

Vaaman Sir Memorial English Day Competition 2012

All students of Late Mr.M.Sivapalan (Vaaman sir) have Joined hands with the 2003 A/L Social Association to conduct an English Day Competition to feliciate the yeomen service done by the beloved Teacher.

Sunday, January 29, 2012

காரைதீவு 2003 உயர் பிரிவு சமுக அமைப்பு மனித நேய சுக நல விழிப்புணர்வு ஒன்றியத்துடன் .இணைந்து நடத்திய இரத்த தான நிகழ்வு 29/01/2012

காரைதீவு  விபுலானந்த மத்திய கல்லூரியில் மக்களால் வழங்கப்பட்ட இவ் இரத்தம் காரைதீவு வாழ் ஏழை வறிய மக்களுக்கு அவசர தேவைகளின் போது இலவசமாக வழங்கப்படவுள்ளது.இவ் நிகழ்வில் 25 பேர் இரத்த தானம் வழங்கியுள்ளனர். 

இவ் நிகழ்வை சிறப்பாக நடாத்த உதவி புரிந்தோர் 

Dr. M.I.M.SIRAJ
Dr.THILINA RUWANPURA 

மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை Nurse & Midwife









இந் நிகழ்ச்சிக்கு ஆதரவையும் அனுசரணையும் வழங்கியது மனித அபிவிருத்தி ஸதாபனம் காரைதீவு (HDO)