Pages

Subscribe:

Tuesday, March 6, 2012

நீங்கா நினைவுகளுடன் வளர்க சிவபாலன் ஆசிரியர் புகழ்.

எமது வாமன் சேர் ஞாபகார்த்த நிகழ்வினை (Vaaman Sir Memorial English day-2012) சிறப்பாக நடாத்துவதற்கு சகல வழிகளிலும் தமது பங்களிப்புகளை வழங்கி எம்மை ஊக்குவித்த பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். ஏன் 2003 உயர்தர அமைப்புடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாகுபாடு இல்லாமல் நாம் எல்லோரும் சிவபாலன் ஆசிரியரின் மாணவர்கள் என்ற ஒரே சிந்தனையுடன் எமது ஆசிரியரின் நினைவுதினத்தை மிகச் சிறப்பாக நடாத்தி அன்பு ஆசிரியர் மறையவில்லை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் எங்கள் உள்ளங்களில் என்பதை உலகறியச் செய்த அனைத்து மாணவர்களுக்கும் எமது அமைப்புகள்students of vaaman sir & 2003 A/L Social association சார்பில் நன்றிகள். தொலைவில் இருந்தாலும் பல்வேறு ஆலோசனைகளை facebook, telephone மூலம் வழங்கி இருந்தீர்கள். தமது சக்திக்கு மீறிய நிதிப் பங்களிப்பை வழங்கிய 2013 A/L மாணவர்களுடைய ஆர்வத்திற்கு நன்றிகள். வெளிநாடுகளில் வசித்தாலும் ஆசிரியர் மீதுள்ள பாசத்தால் நெருக்கடியான நேரத்தில் நிதிப் பங்களிப்புகளை வழங்கிய Mr.T.Jeyanan(UK), Miss V.Sujani & Mas.V.Nurojan (Australia) and Mrs.Chanthiriga Jegathas(UK) ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள். எதிர்பார்க்கப்பட்ட நிதிப் பங்களிப்புகள் கிடைக்காவிட்டாலும் காரைதீவிலேயே நிதி சேகரித்த மாணவர்களுக்கு எமது நன்றிகள்.

நீங்கா நினைவுகளுடன் வளர்க சிவபாலன் ஆசிரியர் புகழ் .

0 comments:

Post a Comment