Pages

Subscribe:

Sunday, December 15, 2013

Annual Get together 2013

2003 உயர்தரப் பிரிவு சமூக அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் 


2003 உயர்தரப் பிரிவு சமூக அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலானது 15.12.2013 மு.ப 11.00 இற்கு காரைதீவு-06 இலுள்ள பல்தேவைக்கட்டடத்தில் தலைவர் அ.வாகீஷன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.மு.இராஜேஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உபதவிசாளர் திரு.தட்சணாமூர்த்தி,தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சகாதேவராஜா, அக்கரைப்பற்று பிராந்திய மனித உரிமைகள் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமதி. நிஸாந்தினி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். முக்கிய நிகழ்வாக வறிய குடும்பத்தைச் சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி வழங்கப்பட்டது. கலைமகள் முன்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் அமைப்பின் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பான 'மீள் பார்வை-2013' புத்தக வெளியீடும் இடம்பெற்றது. தொடர்ந்து அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.























Tuesday, September 3, 2013

Free Seminar For G.C.E (O/L) Students 0n 26.08.2013 - 30.08.2013

க.பொ.த சா/த மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் முதலாம் நாள் நிகழ்வுகளில் அமைப்பின் தலைவர் அ.வாகீஷன் தலைமையில் கடந்த வருடம் பரீட்சையில் 9A சித்தி பெற்ற  லோ.கினோஸா, வி.சதுட்சா, தி.சிந்துவர்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதிதிகளாக அதிபர்களான திரு.வித்தியராஜன் , திரு.மணிமாறன் கலந்து சிறப்பித்தனர்.



























தொடர்ந்து தமிழ் பாட கருத்தரங்கு இடம்பெற்றது. இரண்டாம் நாள் கணிதபாடம் திரு. P. சுபாஸ்கரன் மற்றும் திரு. A .வாகீஷன் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினார்கள். முன்றாம் நாள் திரு.S. சுரனுதன் ஆங்கில பாடத்தையும் நான்காம் நாள் விஞ்ஞான பாடத்தை திரு.J.அன்ரனி பயஸ், செல்வி. T.உதயரஜி, திருமதி.சிவேந்தினி பார்த்தீபன் வழங்கினார்கள். இறுதி நாள் வரலாறு பாடத்தை திரு.S . விமல்ராஜ் நடாத்தினார். இறுதி நாள் நிகழ்வுகளின் போது மாணவர் கருத்துக்கள் மற்றும் நடைபெற்ற பாடங்களில் வைக்கப்பட்ட பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.S. ஜெகராஜன் , உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. T. சகாதேவராஜா , பொறியியலாளர் திரு.K. சசிகுமார் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.