2003 உயர்தரப் பிரிவு சமூக அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல்
2003 உயர்தரப் பிரிவு சமூக அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலானது 15.12.2013 மு.ப 11.00 இற்கு காரைதீவு-06 இலுள்ள பல்தேவைக்கட்டடத்தில் தலைவர் அ.வாகீஷன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.மு.இராஜேஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உபதவிசாளர் திரு.தட்சணாமூர்த்தி,தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சகாதேவராஜா, அக்கரைப்பற்று பிராந்திய மனித உரிமைகள் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமதி. நிஸாந்தினி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். முக்கிய நிகழ்வாக வறிய குடும்பத்தைச் சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி வழங்கப்பட்டது. கலைமகள் முன்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் அமைப்பின் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பான 'மீள் பார்வை-2013' புத்தக வெளியீடும் இடம்பெற்றது. தொடர்ந்து அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.